திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,26,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007 வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள், தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.. மேலும் இவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க கோவாக்ஸின் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் மற்றும் ஆதார் கார்டு நகல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்நிலையில் திருச்சி புத்தூர் பிஷப் பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு இன்று துவக்கி வைத்தார்.

 அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்….

கொரோனா பரவல் நடவடிக்கையாக அனைத்து இடங்களுக்கும் 50 சதவீத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி முககவசம் அணிந்து நோய்த் தொற்றை தடுக்க வேண்டும். ஒமைக்ரானுக்கு ஆக்சிஜன் தேவைப்படாது, 90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். திருச்சி இரண்டாம் தலைநகரமாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. மணப்பாறை சிப்காட்டில் ஆயுத தளவாடங்கள் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார், புறநகர் பகுதிகளில் அரை வட்ட சாலை பணிகள் முழுவதும் நிறைவுபெறும் நிலையில் புதிய வியாபாரங்கள் நடைபெறும். அடிப்படை வசதிகள் முழுவதும் திருச்சிக்கு கொண்டு வந்து சேர்க்கும். முதலமைச்சரிடம் அனுமதிபெற்று, 45 நாட்களுக்குள் டெண்டர் விடப்பட்டு பின்னர் ஒரு வருடத்திற்குள் புதிய பேருந்து நிலையம் பணி நிறைவுபெறும், இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், விவசாய நிலங்கள் வியாபார ஸ்தலங்கள் ஆக மாறும்போது விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும், எந்தத் திட்டம் ஆரம்பித்தாலும் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள பலர் குறை சொல்லித்தான் ஆவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்..

இதன்பின் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில்…

ஓமிக்கிரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி தயாராக உள்ளது. மாஸ்க் தான் பெரிய மருந்து, மூன்று நாட்களுக்குள் பாஸிடிவ் என்பது நெகட்டிவ் ஆக மாறியுள்ளது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்…இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *