தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் திருச்சி மாநகர் 40வது வார்டு பெயிண்டர்கள் பிரிவு கிளை அமைப்பு கூட்டம் எடமலைபட்டி புதூரில் டிவி செந்தில் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

——————————-

ஒன்றிய அரசின் 3- வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பாரத் பந்த் செப்டம்பர் 27ல் நடைபெறுவதையொட்டி திருச்சி மாநகரில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் பெயிண்டர் பிரிவு தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடந்த புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக லாரன்ஸ் துணைத் தலைவர்களாக செந்தில்குமார், டிவி செந்தில் செயலாளராக சங்கு நாதன் துணை செயலாளர்களாக சந்தோஷ், மணிகண்டன் பொருளாளராக ராஜ்குமார் உள்ளிட்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published.