திருச்சி சிங்காரத்தோப்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 22.09.2021 முதல் 20.10.2021 வரை ( ஞாயிறு உட்பட ) நடைபெறும் கொலு கண்காட்சி விற்பனையை வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் , பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கங்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள் , கொலு செட்டுகள் , கொண்டபள்ளி பொம்மைகள் , ஏட்டி கொப்பக்க பொம்மைகள் , மரப்பாச்சி பொம்மைகள் , காகிதக்கூழ் பொம்மைகள் , மண் , பளிங்குக்கல் , மாக்கல் , நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ .50 முதல் ரூ .45000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன . இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள் : மலைக் கோட்டை , தஞ்சை பெரிய கோயில் , பழனி மலை , திருத்தணி , தங்கத்தேர் , அம்மன் தேர் , முருகன் கோயில் , மதுரை மீனாட்சி அம்மன் விநாயகர் கல்யாணம் , பொண்ணு பார்த்தல் , பூணுல் செட் , காமதேனு லட்சுமி , சிங்கேரி சாரதாம்பாள் , உடுப்பி கிருஷ்ணர் , கர்ணன் ஜனனம் ராமர் சீதா சுயம்வரம் , பாமா ருக்மணி திருமணம் , சித்திபுத்தி திருமணம் ,

வள்ளிதெய்வானை திருமணம் , குருகுலப் பயிற்சி , பகா சூர வதம் , இராவணன் தர்பார் , ராமர் கனையாழி தொடுத்தல் , சீதை கனையாழி வாங்குதல் , சஞ்சீவி மலை , அகலிகை மோட்சம் , பரதன் பாதுகை , சபரி விருந்து , சூர்ப்பனகை மூக்கு அறுபடுதல் , அக்னிப் பிரவேசம் , குகன் ஓடம் , சீதை ஜனனம் , ராமர் ஜனனம் , ராமர் வில் உடைப்பு , வாலி வதம் , ராவணன் வதம் , அன்ன வாகனம் , சூர்ய ரதம் , கைலாயம் செட் , பிரதோஷம் செட் , தக்ஷிணா மூர்த்தி , நால்வர் செட் , திருப்பாற் கடல் , தாயக் கட்டம் , அஷ்ட பைரவர் , பள்ளிக் கூடம் , பல்லாங்குழி , நவக்கிரகம் செட் , குசேலர் , ராகவேந்திரா , மீனாட்சி , ராஜேஸ்வரி , பாம்பு கருமாரி , சத்யநாராயணா , அர்த்த நாரீஸ்வரர் , பாரதி , காந்தி , குருவாயூரப்பன் , சிங்க அம்மன் , புலி அம்மன் , ரிஷப வாகனம் , உற்சவப் பெருமாள் , ரெங்கநாதர் , சாரதாதேவி , அங்காள பரமேஸ்வரி , கிருஷ்ணர் தொட்டில் , கிருஷ்ணர் நடை வண்டி , துலாபாரம் , உரல் செட் , மண் உருண்டை சாப்பிடுதல் , கிருஷ்ணர் பிறப்பு , உரி அடித்தல் , ஜலக் கீரிடை , காளிங்க நர்த்தனம் , கிருஷ்ணர் மல்யுத்தம் , பாஞ்சாலி சுயம்வரம் , பீஷ்மர் அம்பு படுக்கை ,

தொட்டில் குழந்தை , நவதுர்கா , நவநரசிம்மர் , ராமர் ஜனனம் , புத்திர காமஸ்ரீ யாகம் , வசுதேவர் , காற்றரக்கன் , நாரை வதம் , அஷ்ட பைரவர் செட் , நவதுர்கா வாகனம் , கிராமிய விளையாட்டுகள் செட் , வேத மூர்த்திகள் செட் , கார்த்திகை தீபம் , கல்யாண ஊர்வலம் , கிரிக்கெட் , சஞ்சீவி செட் , பெருமாள் ஊர்வலம் செட் , நவ கண்ணிகள் செட் , பானைகிருஷ்ணன் , தசாவதாரம் செட் , அஷ்டலக்ஷ்மி செட் , கயிலாய மலைசெட் , கார்த்திகைப் பெண்கள் செட் , ஸ்ரீரங்கம் செட் , அன்னபூரணி செட் , நவ நாயகி , விநாயகர் செட் , மஹாலக்ஷ்மி வரம் செட் , மாயா பஜார் செட் , சீனிவாச கல்யாணம் செட் , மீனாட்சி கல்யாணம் செட் , மும்மூர்த்தி செட் , ராமர் பட்டாபிஷேகம் செட் , தாத்தா பாட்டி செட் , பெருமாள் தாயார் செட் , ராமர் பாலம் செட் , சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட் , கனகதாரா செட் ,

முருகர் உபதேசம் செட் , கஜேந்திர மோட்ஷம் செட் , மாங்கனி செட் , கீதா உபதேசம் செட் , ஜோதிர்லிங்கம் செட் , பரத நாட்டியம் செட் , அசோகவனம் செட் , பீஷ்மர் அம்புப்படுக்கை செட் , கனையாழி செட் , ஆழ்வார் செட் , கோபியர் டான்ஸ் செட் , விவசாய செட் , ஜடாயு மோட்சம் செட் , ராமர் செட் , அகலியா விமோட்சம் செட் முதலான பொம்மைகள் திருச்சி , தஞ்சாவூர் , மதுரை , ஆகிய மாவட்டத்திலிருந்தும் , கல்கத்தா , இராஜஸ்தான் , பாண்டிச்சேரி , ஆந்திரா , கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட பொம்மைகள் , எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன . மேலும் வீட்டில் கொலு பொம்மைகளை வைத்து பூஜை செய்து வழிபட பெண்கள் ஆர்வமுடன் கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *