திருச்சி கம்பரசம்பேட்டை வடக்குத்தெரு பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமாரி வயது 54 இவரது வீடு ரயில்வே தண்டவாளம் அருகே அமைந்துள்ளது இந்நிலையில் வழக்கம்போல் தனது வீட்டின் ஹாலில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை யாரோ ஒருவர் இழுப்பது போல உணர்வு ஏற்பட்டு கண் விழித்து பார்த்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தங்க செயினின் ஒரு 1/2 பவுனை மட்டும் கட் செய்து எடுத்து கொண்டு வீட்டின் கதவை தள்ளி விட்டு வேகமாக வெளியே ஓடினான். உடனடியாக கூச்சலிட்ட அக்கம்பக்கத்தினரை எழுப்பினார். பொதுமக்கள் திருடனை தேடியபோது திருடன் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை இடுபட்ட போது.இதே பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் வசித்து வரும் பூசாரி சதீஷ் என்பவரின் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினையும் திருடர்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக மோப்பநாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வீட்டின் உள்ளே திருடர்கள் விட்டுச்சென்ற (நெயில் கட்டர்) நகம் வெட்டும் கருவி கிடப்பதை கண்டுபிடித்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருடர்கள் நகம் வெட்டும் கருவி மூலம் இப்பகுதியில் உள்ள வீடுகளில் உறங்கிய பெண்கள் அணிந்திருந்த தங்கச் செயினை கட் செய்து திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இந்தத் நெயில் கட்டர் திருடர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *