தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி சின்னதுரை தலைமையில் விவசாயிகள் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தில் விவசாய பணிக்கு வேலையாட்கள் கிடைக்காமல் இருக்கும் இந்த நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியை தற்காலிகமாக உடனடியாக நிறுத்தி விவசாய பணிகளுக்கு தொய்வின்றி ஆட்களை அனுப்ப வேண்டும், தேசிய அரை வட்ட சுற்றுச்சாலைக்காக புங்கனூர் ஏரி, கள்ளிக்குடி ஏரி, கொத்தமங்கலம் ஏரி, பஞ்சப்பூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் 200 அடி அகலத்தில் மண்ணைக் கொட்டி சாலையமைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து விவசாயிகளிடம் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மற்றும் மேற்கு தொகுதி தாசில்தார் ஷேக்முஜுபுத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மட்டும்தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியதை அடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வந்து விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *