திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள மாத காலம் ஆகும் என்பதால் , மேற்படி காவேரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை 10.09.2022 இரவு 12 முதல் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது .

இதுதொடர்பாக இன்று 11.09.22 – ஆம் தேதி காலை , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள காவேரி பாலத்தையும் , போக்கு வரத்து இடையூறு ஏற்படாவண்ணம் திட்டமிடப்பட்ட மாற்றுப்பாதைகளையும் பார்வையிட்டு பொதுமக்களுக்கும் , வாகன ஓட்டுநர்களுக்கும் , போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள் . காவேரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பொதுமக்களும் , வாகன ஓட்டுநர்களும் மாற்றுப் பாதைகளில் தங்களது பயணத்தை பாதுகாப்பாக மேற்கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் , தெரித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *