திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்ன மண்டவாடி பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் ரஞ்சித் குமார் வயது 24 திருச்சி பெரிய மிளகுபாறையிலுள்ள கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியில் MBBS UG Student (House Sourgeon) பயின்று வருகிறார். தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள அறை எண் 25-ல் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியத்திலிருந்து இவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த இவரது நண்பர் MBBS Student கோகுல் என்பவர் பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்தபோது.

மருத்துவ மாணவர் ரஞ்சித்குமார் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக சகமாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர் மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவம் இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்