தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வரும் சசிகலா பல்வேறு ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்ற திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் கலந்து கொண்ட அவர் தஞ்சையிலிருந்து இன்று காலை திருச்சி வந்ததிருந்தார் – பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலகாமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிடம் ஆசி பெற்ற சசிகலா ஆனைக்கா அன்னல் கோபுரம் வழியாக சென்ற ஜம்புகேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதிக்கு சென்றார்.

சசிகலாவை வரவேற்பதற்காக அ.ம.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருவானைக்காவல் ஆலயத்திற்கு முன்பாக குவிந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்