திருச்சி புதுக்கோட்டை சாலை ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோதனை சாவடியில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்குவது குறித்து பார்வையிட்டார். மேலும் சோதனைச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் சிசிடிவி கேமரா மற்றும்

தலைக்கவசம் மற்றும் குடிபோதையில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கும் கருவி மற்றும் அபராதம் வசூலிக்கும் ரசீது புக் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் செக் போஸ்ட்டின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு துனண கமிஷனர் சக்திவேல், பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் ஏர்போர்ட் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *