திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை, தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி அடுத்துள்ளகுள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மற்றும் திருச்சி மாவட்டம் அளுந்தூர் அடுத்துள்ள கொட்டப்பட்டு புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளிகளுக்கு கணினி, மேசைகள் பீரோ மற்றும் கற்றல் உபகரணங்கள், வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் பெஸ்கி, மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், பேராசியர்கள் ஜெயக்குமார், ஜெரோம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமாரி, புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியர் ஆரோக்கிய சுந்தர்,தமிழ்துறை மாணவர்கள் சந்தோஷ், கஸ்தூரி செபாஸ்டின் மாதேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செப்பர்டு விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்துராஜா,செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.