திருச்சி தேசிய கல்லூரியில் கடந்த 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா தேசிய கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. இவ்விழாவிற்கு கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனரும், முதன்மைச்செயல் அலுவலருமாமன ராம் பிரவீன் சாமிநாதன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டயங்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஏனென்றால் இக்கல்லூரி பல தலைவர்களை உருவாக்கி யிருக்கிறது. பட்டம் பெறும் மாணவர்கள் குழப்பம், ஆர்வம், கடின உழைப்பு, நன்றியுணர்ச்சி, பணிவு, உற்சாகம் ஆகிய ஆறு விஷயங்களையும் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும் என்றார். மேலும் மாணவர்கள் அனைவரும் தொழில்முறை கல்வியில் அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்து பேசினார்.

முன்னதாக தேசியக்கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன் வரவேற்று, ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் விழாவை துவங்கி வைத்தார். விழாவில் பட்டங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் 1,177 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 869 இளங்கலையும் 182 முதுகலையும், 126 இளநிலை ஆய்வறிஞர் பட்டமும் மொத்தம் 19 துறைகளில் இருந்து பெற்றுக் கொண்டனர். மேலும் இளநிலையில் 2017-2020 ஆம் கல்வி ஆண்டில் 1,200 மாணவர்கள் தேர்வு எழுதி 1,079 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதுநிலையில் 2018-2020 ஆம் கல்வி ஆண்டில் 270 மாணவர்கள் தேர்வு எழுதி 213 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 185 மாணவர்கள் கல்லூரி வளாக நேர்முக தேர்வில் பல துறையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *