திருச்சி மாவட்டம் புங்கணூர் ஊராட்சியில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட படிப்பகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த படிப்பகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், Tnpsc உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்டம் 3000-ன் கவர்னர் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து புங்கனூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சங்கத்தின் தலைவர் எட்வின், செயலாளர் ஆறுமுகம், திட்ட தலைவர் நெவ்மான், திட்ட இயக்குநர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *