திருச்சி சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியிலிருந்து ஓயாமரி சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவில் ஆயில் கொட்டப்பட்டிருந்ததால். அதன் வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி வழுக்கி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருகில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் பிலிப்ஸ் பிரபாகரன், ஞானகுமார் ஆகியோர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் கொட்டி கிடந்த ஆயிலை சரி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் அருகில் இருந்த மண்ணை சாக்குமூட்டையில் எடுத்து வந்து போக்குவரத்து காவலர் தனது கைகளால் கொட்டி உடனடியாக சரி செய்தார். மேலும் அருகில் இருந்த பேரி கார்டுகளை வைத்து அப்பகுதியில் இருசக்கர வாகனம் செல்லாத வாரு ஏற்பாடு செய்தனர்.இதனை கண்ட வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நலன் கருதி மனித நேயத்தோடு செயல்பட்ட போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை பாராட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.