தமிழ்நாடு முதலமைச்சர் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,

60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணையினை சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காலை முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ,

60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை பணி நேற்று துவங்கியது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 1400 மாநகர போலீசாருக்கு கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை பணி இன்று துவங்கியது. இதனை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் டாக்டர் ஹாக்கிம், துணை கமிஷனர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *