திருச்சி உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெட்லைட்டில் நல்ல பாம்பு ஒன்று நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை படம் எடுத்தபடி சீறிக் கொண்டிருந்தது.

இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். மேலும் இது குறித்து திருச்சி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் டிவிஎஸ் ஹெட் லைட்டில் மறைந்திருந்த ஐந்து அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *