திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் இலங்கை தமிழரான முகமது அலி என்பவரும் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் இதுகுறித்து கேகே நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த எழுத்தாளர் முகமது அலி வயது 52 என்பதும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக ராமேஸ்வர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் வழக்கு முடிந்து நான்கு மாதங்களாக விடுதலை ஆகாமல் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இறந்த முகமது அலிக்கு சிறப்பு முகாமில் காதல் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.