தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது .இதையொட்டி காவிரியில் ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், திருச்சி கடைவீதிகள் மக்கள் வெள்ளம் கரைபுரண்டன. மெயின்கார்டு கேட், என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, சூப்பர் பஜார், தெப்பக்குளத் தெரு, நந்திக்கோவில் தெரு உள்ளிட்ட அனைத்து கடைவீதிகளிலும் காலை முதல மக்கள் பொருள்கள் வாங்க குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அனைத்து ஜவுளிக் கடைகளிலும் நுழைய முடியாதபடி கூட்டம் அலைமோதியது. கூட்டத்தில் சிக்கி துணிகளை தேர்வு செய்வதே பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் மக்கள் தீபாவளி புத்தாடைகளை தேர்வு செய்த பிறகு, ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிந்தது.

 இதனிடையே திடீரென மழை பொழிந்தது. இருப்பினும் கூட்டம் குறையவில்லை. தீபாவளி கூட்டத்தால் திருச்சி மாநகர் திணறியது. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டது. இவற்றை போக்குவரத்து போலீஸôர் சிரத்தையுடன் எதிர்கொண்டு, ஒழுங்குபடுத்தினர்.கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றால் வியாபாரம் முடங்கிய நிலையில், நிகழாண்டு தீபாவளி வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சிகரமாக உள்ளது.

 திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், திருச்சியில் தீபாவளி விற்பனை அமோகமாக உள்ளது. ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் களைகட்டி வருகிறது. காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்க காந்தி சந்தைக்கு வரும் பெண்கள் தங்களது பையில் பணத்தையும், கைப்பேசியையும் வைக்க வேண்டாம். திருடர்கள் பயமுள்ளதால், தங்களது உடமைகளையை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வதுடன், எச்சரிக்கையாக இருக்கவும். அதே சமயம், குழந்தைகளை கூட்ட நெரிசலில் அழைத்து வராமல் தவிர்ப்பதுடன், தங்க நகைகளையும் அணிந்து வர வேண்டாம். இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறின்றி நிறுத்தவும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *