திருச்சி மாநகராட் சியின் 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.திருச்சி மாநகராட்சிக்கு வருவாய் நிதி, குடிநீர், மூலதன நிதி உள்ளிட்டவைகள் மூலம் மொத்தம் வரவு 214011.52 லட்சமாகவும் செலவு 213919.03 லட்சமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. உபரி பட்ஜெட்டாக 92 லட்சத்து 49 ஆயிரம் உள்ளதாக வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடபட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் கல்விக்கு என்று 2198 லட்சம் வரவு செலவு 2185 அச்சமாகவும் உள்ளது. கல்விக்கும் உபரி நிதி 13 லட்சம் உள்ளது என குறிப்பிட்டதக்கது.பட்ஜெட்டில் மிக முக்கியமான மாநகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டிடம், மேலப்புதூர் நடைமேம்பாலம் ,சூரிய ஒளி மூலம் மின் சக்தி தயாரித்தல், ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு மேம்படுத்துதல், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்,சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சீர்மிகு சாலைகள், நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டும் பணிகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.முக்கியமாக திருச்சியில் உள்ள 65 வார்டுகளில் ரூபாய் 3250 லட்சம் மதிப்பீட்டில் 128 புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் வார்டுக்கு 50 லட்சம் ரூபாய் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2022- 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை நிதிக்குழு தலைவர் முத்துசெல்வம் அறிவித்தார். 30நிமிடத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *