தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரேகட்டமாக இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர். மாலையுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது.

மேலும் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஜமால் முகமது கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 மணி நிலவரப்படி 63% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *