திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் கிராமத்தில் இறை அருளால் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சக்தி சங்கர நந்தவனத்தில் இறையருளாலும் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள நூதன தடாக பிரதிஷ்டை ஸ்ரீ பரமாச்சாரியார் விக்ரக பிரதிஷ்டை ஸ்ரீ சீரடி சாய்பாபா விக்ரக பிரதிஷ்டை பெருவிழா நடைபெற்றது.

முத்தரசநல்லூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் தெய்வங்களின் அருட்கடாட்சம் ஸ்ரீ சக்தி சங்கர நந்தவனத்தில் தடாக பணிகள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ மகா பெரியவாளின் உத்தரவின்படி 2014ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது மங்களகரமான சுபகிருது வருடம் கண்டுள்ள படி வைகாசி மாதம் தசமி திதி அஸ்தம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் கடக லக்கினத்தில் நூதன தடாக கும்பாபிஷேகமும் தொடர்ந்து ஸ்ரீ பரமாச்சாரியார் மற்றும் ஸ்ரீ சீரடி பாபாவின் நூதன விக்கிரக பிரதிஷ்டை களும் நடைபெற்றது

இந்த கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தவர்கள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய அர்ச்சகர் கணேச குருக்கள் கிராம ஆலய அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்கள் சர்வசாதகம் சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார் முதல்வர் ஸ்ரீ ஸ்வர்ண வல்லி அம்பிகை சமெத முக்தீஸ்வரர் வேத சிவாகம பாடசாலை செதலபதி, உப சர்வசாதகம் சிவாச்சாரியார் குலபதி விஸ்வநாத சிவாச்சாரியாரின் மானசீக அருளாசியுடன் அவரின் சிஷ்யர் சிவாகம சிரோமணி செந்தில்குமார் சிவாச்சாரியார் திருநாகேஸ்வரம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *