திருச்சி மாவட்டம் 1432 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமபந்தி கணக்கு முடித்தல் குறித்த கூட்டம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று 7-ம் தேதி பாண்டமங்கலம், தாமலவாரூபயம், புத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதேபோல 8-ம் தேதி இன்று கோ.அபிஷேகபுரம் உய்யக்கொண்டான் திருமலை பிராட்டியூர் மேற்கு பிராட்டியூர் கிழக்கு பஞ்சபூர். ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். இந்த கூட்டத்தில் வருவாய் தீர்வாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ஏழுமலை பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார் அருகில் வட்டாட்சியர் மேற்கு தாசில்தார் ராஜவேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 இந்த ஜமாபந்தியின் கூட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 91 மனுக்கள் பெறப்பட்டது அதில் 10 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் உள்ள 76 மனுக்கள் நிலுவையில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *