திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் , கொலை வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார் .

 

இந்நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் , மேல அம்பிகாபுரம் அருகில் சிலம்பரசன் வயது 25 என்பவரை குடும்ப சொத்து பிரச்சினை காரணமாக எதிரி இளவரசன் மற்றும் பலர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் மேற்படி சிலம்பரசனை உடலின் தலை மற்றும் கை பகுதியில் தாக்கி கொலை செய்தது தொடர்பாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , வழக்கின் குற்றவாளியான இளவரசன் என்பவரை கடந்த 23.10.21 ந்தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . ஏற்கனவே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஆணை சார்வு செய்து சிறையிலடைக்கப் பட்டுள்ளனர் .

 

அதேபோல் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுத்தெருவில் உள்ள ரேசன் கடை அருகே கடந்த மாதம் 21.10.21 – ந்தேதி குற்றவாளி கிருபாகரன், ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியும் , கத்தியால் தோள்பட்டை மற்றும் முதுகில் தாக்கியதாக பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் குற்றவாளியான கிருபாகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

 

இதுதொடர்பாக விசாரணையில் இவ்வழக்குகளின் குற்றவாளிகளான இளவரசன் மற்றும் கிருபாகரன் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது . எனவே , மேற்படி குற்றவாளிகளான இளவரசன் மற்றும் கிருபாகரன் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் மற்றும் பாலக்கரை காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.‌ இந்த இரு குற்றவாளிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரிகள் இளவரசன் மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணையை 09.12.21 – ந்தேதி சார்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் , திருச்சி மாநகரம் , காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *