திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குட்செட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ரெயில்வே முதுநிலை கமர்சியல் மேலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் விரைந்து ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரக்கோரி இன்றையதினம் ரெயில்வே சரக்கு வேகன்களில் வரும் உரம், கோதுமை மற்றும் மத்திய தொகுப்பிற்கு கொண்டு செல்லப்படும் சிமென்ட் மூட்டைகளை இறக்க மறுத்தும், சரக்கு லாரிகள் இயக்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 450க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குட்ஷெட்டில் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதாகவும், 1-ந் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே நிர்வாகம் முன்வராவிட்டால் ஒன்றாம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் குட் ஷெட் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவோம் எனவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் பேரில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்