திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் (வயது 35). இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஆயுஸ் என்கின்ற மகன் உள்ளார். நேற்றுஇரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் ‘சேது’ அதிவிரைவு ரயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி பணியில் சேர்ந்தார். இந்த இரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் செல்லும்போது டிக்கெட் பரிசோதகர் அரவிந்துக்கும்,பயணி ஒருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணி சென்னையில் உள்ள தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். அந்த தலைமைச் செயலக ஊழியர் ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு இரயிலில் பணிக்கு திரும்புகையில் பரிசோதகருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த வாக்குவாதம் முத்தியதில் டிக்கெட் பரிசோதனை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரயில்வே டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விழுப்புரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, இரயில்வே பாதுகாப்பு படை படையினர் திருச்சிக்கு பயணிகள் அழைத்து வந்தனர். பின்னர் டிக்கெட் பரிசோதகர் எஸ் ஆர் எம் யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரயில்வே போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் எஸ்.ஆர்.எம்.யூ தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு கிரிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பாக்கியவர் மீதும் தாக்கிய வரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சக டிக்கெட் பரிசோதகர்கள்,ரயில்வே அதிகாரிகள் திருச்சி ஜங்ஷன்ரயில் நிலையம் முன்பாக எஸ்.ஆர்.எம்.யு. துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறும்போது:- எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் ஜாதி இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எந்த தொழிலாளி தாக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம். இந்த விஷயத்தில் மொழி வேறுபாட்டினால் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்படவில்லை.தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கம் ஓயாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *