லால்குடி சட்டமன்றத் தொகுதியின் தின்னியம் – மனக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிராஜ் எற்பவரின் மகன் ராணுவ வீரர் தேவ் ஆனந்த். 24 வயதான இவர் சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அவரது பெற்றோர் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை அணுகி ராணுவ வீரர் தேவ் ஆனந்த் உடலை சொந்த ஊர் எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் முயற்சியால் ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்கு இன்று கொண்டு வரப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு, எம்எல்ஏக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் அரசு மரியாதையுடன் இறந்த ராணுவ வீரர் தேவ் ஆனந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்