திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு

இன்று காலை 8.15 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. – இந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வேல்முருகன் வயது(36) என்பவர் விமானத்தின் இருக்கையில் அமர்ந்தவாறு இறந்த நிலையில் வந்துள்ளார் .

உடனடியாக விமான நிலைய மருத்துவ நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் – இதனை அடுத்த விமானத்திற்குள் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவர் உடல் நல குறைவால் உயிரிழந்தது தெரியவந்தது – இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் வேல் முருகனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *