திருச்சி வயலூர் முருகன் கோவிலில் இன்று தமிழக சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

திருச்சி வயலூர் பகுதியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு முன்னதாக மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து கோவில் எதிரே உள்ள மரத் தேரின் நிலைக்குறித்தும், அதனை தேக்கு மரத்தில் சீரமைக்க கோரியும், கந்த சஷ்டி விழா திருமண மண்டபத்தையும் அதனைத் தொடர்ந்து அன்னதான மண்டபம், கருணை இல்லம், திருமண மண்டபத்தின் கழிப்பறையை பார்வையிட்ட பின்பு தற்போது உள்ள கழிப்பிடத்தை விட நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தவும்,

மேலும் கோவில் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற கோரியும் மேலும் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கோவில் ஆணையர் குமரகுருபரன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, வயலூர் முருகன் கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், நிர்வாக அதிகாரியும் கோவில் பொறுப்பாளருமான ஜெய்கிஷன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்