திருச்சி விமானங்கள் வந்து செல்லும் வழியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி நகரை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி நகரில் உள்ள பிளாட் எண் 23ல் செயல்பட்டு வரும் தர்ஷினி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் முத்து என்கிற மாரிமுத்து அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மேல்தளத்தில் சுமார் 63 அடி உயரத்திற்கு செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திருச்சி பன்னாட்டு விமான நிலையம் ஓடுதளம் மிக அருகில் அமர்ந்துள்ள இடம் ஆகும். எனவே, செல்போன் டவர் அமைத்தால் இவ்வழியாக வரும் விமானங்கள் தரையிறங்கும் நேரத்தில் விபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்படும். திருச்சி மாநகராட்சியில் விதியின்படி 28அடிக்கு மேல் கட்டடம் கட்ட மக்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்ட நிலையில் சுமார் தரையில் இருந்து 60 அடி உயரத்திற்கு மேல் செல்போன் டவர் அமைக்க அனுமதி கொடுத்தது தவறு. விமானம் தரையிறங்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவே இதனை கருத்தில் கொண்டு உயிர் சேதம் ஏற்படுத்தும் முன்பு நடவடிக்கை எடுத்து செல்போன் டவர் அமைப்பதே நிரந்தரமாக தடைசெய்ய வேண்டுமென அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *