திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேருவை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வீதிவீதியாக சென்று அங்குள்ள வாக்காளர்களிடம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்கு சேகரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது 20-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேருவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில்:-

இந்த 20 வது வார்டில் பொது மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் போது பொதுமக்கள் எங்களுக்கு அமோக ஆதரவும், உற்சாகமும் அளித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் திருச்சி மாநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், நலத்திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டது.

அதேபோல் வாக்காளர் பெருமக்களாகிய நீங்கள் 20வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேருவை வெற்றிபெற செய்வதின் மூலம் இப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதி போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து சிறப்பாக பணியாற்றுவார்.

மேலும் இப்பகுதியில் பல நல்ல திட்டங்களை செயலாக்கம் செய்ய இவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இந்த 20-வது வார்டினை திருச்சியில் முதன்மை வார்டாக மாற்றி மக்களின் பிரச்சனைகளை தேவைகளை நிறைவேற்ற மாநகராட்சியில் மட்டுமல்ல எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று தீர்த்து வைப்பார்.

தற்போது 20 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேரு மீது இப்பகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்ற சிறப்பாக பணியாற்றுவார். எனவே 20 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேருவுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது பகுதி கழக செயலாளர் சுரேஷ் குப்தா மற்றும் வட்ட கழக செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *