நடைபெற உள்ள திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் துணை மேயரும் 27 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளருமான அன்பழகன் இன்று காலை தென்னூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று அங்குள்ள பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

மேலும் தென்னூர் 27-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பஜார், மூலகொல்லை கார தெரு, சங்கீதா புரம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக தீராத பிரச்சினையாக உள்ள குடிநீர், மின்விளக்கு மற்றும் சாக்கடை பிரச்சினைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்பேன் என்று கூறி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டுமாறு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் 27-வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.