திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் திருவள்ளுவரின் திருஉருவ சிலை மற்றும் தமிழ் தாய் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மலைக்கோட்டை முரளி ஜி எம் ஜி மகேந்திரன் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேசனின் கனிஷ்டகுமாரன் செல்வன் சிவகார்த்திகேயன் திருக்குறள் மனப்பாடமாக வாசித்து பரிசு பெற்றார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கும், தமிழ்த்தாய் உருவ சிலைக்கும் பாஜக திருச்சி மாநகர் மாவட்டத்தலைவர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதில் திருச்சி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன், துணை தலைவர் ஜெ. விவேக், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பூக்கடை சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல் திருவள்ளுவர் உருவ சிலைக்கும், தமிழ்த்தாய் திருஉருச்சிலைக்கும் எழுத்தமிழ் இயக்க தலைவர் பட்டைய தணிக்கையர் குமரசாமி,தலைமயில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதில் தமிழ் சங்கம். நிர்வாகிகள் எழுத்தமிழ் இயக்கம்,நிர்வாகிகள் உதயகுமார், கோவிந்தசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிறப்பு விருந்தினராக கிராமாலயா தொண்டு நிறுவனர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பைந்தமிழ் இயக்க இயக்குனர் தமிழாளன், துணை இயக்குனர் கவிஞர் வேல்முருகன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *