மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் விருதுகள் வழங்கினார்.

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை தலைவர்கள், காவல்துறை துணை தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இரண்டு வகையான துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது. இதில் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் (கமாண்டோ) அமல்ராஜ் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் போட்டியில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்