திருச்சி மாவட்டம் துறையூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது 18 உறுப்பினரைக் கொண்ட இந்த மன்றத்தில் ,மன்றத்தின் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சரண்யா மற்றும் துணைத் தலைவராக கண்ணனூரை சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர். கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் தீர்மானங்களை வாசித்தார் இந்த தீர்மானங்களை எதிர்த்து திமுக உறுப்பினர்களான துணைத்தலைவர் புவனேஸ்வரி, 2வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் புனிதா ரவிச்சந்திரன், , 1வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் ரூபிணி, 3வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் அசோகன், மற்றும் தேமுதிகவை சேர்ந்த சிவகுமார்அவர்ளுடன் இணைந்துஅதிமுக உறுப்பினர்களான லலிதா கண்ணன் மற்றும் சின்னம்மாள் சின்னசாமி ஆகியோர் கூட்டத்தின் தீர்மானங்களை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிடப்பு செய்தவர்கள் கூறுகையில்

கவுன்சிலர்களிடம் எந்த கருத்துகளையும் கேட்காமல் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சரண்யா கொரோனா காலங்களில் ஊராட்சிகளில் தொற்று பரவாமல் இருப்பதற்காக 28.00.000 லட்சம் மதிப்பிலான ப்ளீச்சிங் பவுடர்அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திடம் வாங்கியதாகவும இதற்கு முறையாக பில் வாழங்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர் . மேலும் தான் வைத்தது தான் சட்டம் என்று சர்வாதிகாரம் செய்து கொண்டு அரசு பணத்தை முறையாக கணக்கு கட்டாமல் தேவையில்லாத விரைய செலவுகள் செய்கிறார் இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகிறார்கள் இதை கண்டித்து வெளிடப்பு செய்து இருக்கிறோம் என்று கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published.