தென்னிந்திய திருச்சபையின் திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் 75-ம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்னந்திய திருச்சபை தஞ்சை மற்றும் திருச்சி மண்டலத்தின் பேராயர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

 விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு 75-ம் ஆண்டு பவள விழா மலரை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பவன விழா நினைவு தூண் திறந்து வைக்கப்பட்டது..

 மேலும் இவ்விழாவில் ரோமன் கத்தோலிக்க பேராயர் ஆரோக்கியராஜ், தமிழ்லூத்தரன் திருச்சபையின் பேராயர் டேனியல் ஜெயராஜ், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் தென்னந்திய திருச்சபையின் போதகர்கள் மற்றும் திருச்சபையின் அங்கத்தினர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இவ்விழாவில் கல்லூரி மற்றும் திருமண்டலங்களுக்கு உட்பட்ட 125 திருச்சபைகளில் இருந்து வந்த மாணவர்கள் தங்களின் கலைநிகழ்ச்சிகளை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *