திருச்சி தஞ்சை – சாலையில் அரியமங்கலம் பகுதியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு உள்ளது. இந்த பங்க் அருகே திருப்பதி மரப்பட்டரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென மரப்பட்டையிலிருந்து லேசான புகைமூட்டம் வெளியேறியது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென மரப்பட்டரை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் பீதியடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். மரப் பட்டறையில் மரங்கள் நிறைந்து இருந்ததால் தீ முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தீ விபத்துக்குள்ளான மரப்பட்டை தேமுதிக மாவட்ட செயலாளர் கணேசுக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. திடீரென தீ பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *