கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. அதனைக் கண்டித்தும் உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோவில் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் 1 கிலோ கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். அதனைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை திறந்த அரசு கோவில்களை திறக்க கூடாதா..?? உடல் நலனை கெடுக்கும் மது விற்பனையை திறந்துவிட்ட அரசு, மன வலிமையை தரும் தெய்வ வழிபாட்டிற்கு வழி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஸ்ரீராம் ஜீ தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மாரி ஜீ முன்னிலை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து மாநில செயலாளர் ஸ்ரீராம் பேட்டியளிக்கையில்…..மனிதர்களின் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பது, கோவில்கள் மட்டுமே. கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும், அதற்கு முக்கியத்துவம் தராமல் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தந்து கடைகளை திறந்து உள்ளது அதனைக் கண்டித்தும். எனவே இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவாக கோயில்களை திறக்க நடவடிக்கை வேண்டும். மேலும் கோவில்கள் மூடப்பட்டிருப்பதின் மூலம் அவற்றை பராமரிக்கும் பூசாரிகளின் பொருளாதார நிலையை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்