தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் , உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் திட்டமாகும் . திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் , மணிகண்டம் , மணப்பாறை , முசிறி மற்றும் துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டுவருகிறது . மேற்கண்ட வட்டாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை அணித்திரட்டுதல் , உருவாக்குதல் மற்றும் கள அளவிலான செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்குதல் போன்ற பணிகளை ஊராட்சி தோறும் மக்களிடையே கொண்டு செல்ல “தொழில் சார் சமூகவல்லுநர்” ( Enterprise Community Professional ) ஊராட்சிக்கு ஒருநபர் வீதம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்ய தகுதிகள் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

தகுதிகள் : மகளிர் சுய உதவிகுழுவை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் , அதே ஊராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும் , 25 லிருந்து 45 வயது உடையவராக இருத்தல் வேண்டும் , பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் , குறிப்பாக வங்கியியல் , சமூகபணி , வணிகவியல் , வேளாண்மை , வணிக நிர்வாகம் , கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் , ஆன்டிராய்டுபோன் வைத்திருக்க வேண்டும் / பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் , வாழ்வாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் , சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ இருக்கக் கூடாது . மேற்கண்ட தகுதிகளையுடைய நபர்கள் வருகிற 30.11.2021 அன்று மாலை 5 மணிக்குள் தங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகம் அல்லது கீழ்கண்ட வட்டார அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மற்றும் பிற தகவல்களையும் பெறலாம் .

இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *