திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் வயது 22 என்பவரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் எதிரி கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் மீது சிறுவனை கடத்தி கொலை செய்ததாக ஒரு வழக்கும் , சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும் . வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருடுடியதாக ஒரு வழக்கு உட்பட எதிரி மீது 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது .

எனவே , கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் , பகல் மற்றும் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் , கத்தியை காட்டி பணம் பறிப்பது , பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால் , மேற்கண்ட குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் .

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *