திருச்சி பெரிய கடைவீதி பேகம் சாஹேபா பள்ளிவாசல் வளாகத்தில் ஹிலால் கமிட்டி கூட்டம் ஹிலால் கமிட்டியின் தலைவரும், திருச்சி மாவட்ட அரசு காஜியுமான அல்ஹாஜ் மௌலவி முஃப்தி Dr.க.ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயி தலைமையில் நடைபெற்றது

இதில்திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள் திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் மௌலவி முஃப்தி ரூஹுல் ஹேக் திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர ஜமாஅத்துல் உலமா தலைவர்,செயலாளர், பொருளாளர், மற்றும் உறுப்பினர்கள் ஆர்காட் எண்டோமெண்ட் திருச்சி முதன்மை அதிகாரி நௌஷாத் (எ) பஷீர்பாய், சேட் பாய், ரஹமத் பள்ளிவாசல் முத்தவல்லி எஸ் எஸ் ஷாஜகான்,அஞ்சுமன் அர் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் காமில் அன்வர்,டிபிஎஸ்.ராஜாமுகமது, முகம்மது உசேன்மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் பல பகுதிகளிலும் பிறை தென்படாததால், நாளை 3/5/2022 (செவ்வாய் கிழமை) பெருநாள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published.