தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தின் தௌலதாபாத் பகுதியில் வசிக்கும் பசவராஜா என்ற வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண்ணும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வர அந்த பெண்ணிடம் காதலனை மறந்து விட்டு வேறொருவரை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்ததால் கடந்த மாதம் வேறொரு நபருடன் நிச்சயம் செய்யப்பட்டது. காதலிக்கு நடந்த நிச்சயம் குறித்து பசவ்ராஜ் கேள்விப்பட்டு மிகவும் மன வேதனைப்பட்டார்.

மேலும் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்  செய்த காதலியை பழி வாங்க துடித்தார். இந்நிலையில் அந்த பெண் தனியாக வேலைக்கு சென்ற போது அங்கு ஒளிந்திருந்த பசவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் உடலில் 18 முறை குத்திவிட்டு தப்பி ஓடினார். இந்த கத்தி குத்து தாக்குதலில் உயிருக்கு போராடிய அந்த இளம்பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் எல்பி நகர் காவல் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய பசவராஜ் மீது அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பசவராஜ் கைது செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *