திருச்சி , புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித் துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் இன்று நடந்தது. இந்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு கூறுகையில்:

1651 ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது, இதே போல் எல்லா மாவட்டத்திலும் தயார் நிலையில் உள்ளது. கட்டிடங்கள் கட்டும் போது தண்ணீர்,மனல் போன்றவற்றை முறையாக பரிசோதனை செய்த பின்னரே கட்ட வேண்டு என்பதை நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். இருவழிச்சாளைகளை எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவது,அதே போல் நான்கு வழிச்சாலைகளில் ஆறு வழிச்சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதிகம் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு போக்குவரத்து காவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அதனை சரி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தரைமட்ட பாலங்களை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.நிலம் கையகப்படுத்தும் பணிகள் தான் சாலைப் பணிகள் வேகமாக நடை பெறுவதற்கு தடையாக உள்ளது.

சாலை பணிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தான் நிலம் கையகபடுத்தும் பணியில் உள்ளனர், ஆனால் அவர்கள் தான் மற்ற பணிகளையும் பார்க்க வேண்டும்,எனவே இதனை எல்லாம் கண்காணிக்க 5 டி.ஆர்.ஒக்களை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுளார்.

மாநில நெடுஞ்சாலை துறையின் சாலையின் தரத்தை போல் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஆனை இட்டு உள்ளார்.

பூம்புகார் கேட்பார் அற்று உள்ளது – அதனை சரி செய்து புனரமைக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

எங்களுடைய ஆட்சியில் மோனோபோலி இல்லை – பத்திரிகைகளில் அப்படி வளம் வருவதை பார்கிறேன்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தரமான சாலைகளை ஏற்படுத்த வேண்டுமென்பது தான் அரசின் நோக்கம்.

சாலை பணிகள் நடைபெறும் போது சாலையோரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படும் சூழல் ஏற்பட்டால் அதற்கு மாற்றாக மரங்கள் நடப்படும்.

திருச்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது – இதனை கருத்தில் கொண்டு அண்ணா சிலையில் இருந்து நீதிமன்றம் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *