சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 40. பைனான்சியர் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு ஆறுமுகம் அவரது நண்பர் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அமைந்தகரை அடுத்த செனாய் நகர் அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க வண்டியை அங்கேயே போட்டு விட்டு சாலையில் ஓடினார். ஆனால், மர்ம கும்பல் ஆறுமுகத்தை விடாமல் பட்டப்பகலில் நடுரோட்டில் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் முதல்கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக ஆறுமுகத்தை கொன்றது தெரியவந்தது. இவர், கடந்த 2018 மற்றும் 2021ம் ஆண்டில் ஆறுமுகத்தை கொலை செய்ய முயன்றதும், இவர் மீது 2 கொலை, 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.இதையடுத்து 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் மற்றும் அவனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த ரவுடி ரோஹித்ராஜ் (25) ஆகியோர் நேற்று மாலை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *