தமிழக அரசால் 1999ம் ஆண்டு திருச்சி புதுக்கோட்டை சாலை விமான நிலையம் எதிரே அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கம் திறக்கப்பட்டது. அறிவியல் உலகில் நிகழும் சாதனைகள் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த தகவல்கள் காட்சி படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தக் கோளரங்கத்தில் “சுற்றுச்சூழல் தொகுப்பு” உள்ளது. சுற்றுச்சூழல் அமைப்புகள், உயிர்-புவிசார் வேதியியல் சுழற்சிகள், உயிர்-வேறுபாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவையாகும். இதில் “ஷார்க் தீவு”, மேஜிக் ஷோ, ரோலர் கோஸ்டர் போன்ற பல முப்பரிமானப் படங்கள் உள்ளது. மேலும் இதில் ”விஜயன் பிரசார்”, என்ற எடுசாட் வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அறிவியல் மையங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம்.

இந்த மையத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிவியல் சார்ந்த விஷயங்கள் தெரிந்து கொள்வதற்காக இங்கு வந்து செல்கின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கோளரங்க வளாகத்தில் பண்டைய காலத்தில் வாழ்ந்த அரியவகை உயிரினங்களின் உருவங்களை பள்ளி மாணவ மாணவர்கள் பார்ப்பதற்காக வடிவமைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி ஆவின் பால்பண்ணை அருகே உள்ள குளத்தில் மழைநீர் நிரம்பி அருகில் உள்ள அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் வளாகத்தில் புகுந்து மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் தண்ணீரை அப்புறப்படுத்தாதால் தற்போது தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தண்ணீரை அப்புறப்படுத்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.