திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் 3வது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இவர் தனது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யா என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்தது. எனவே ஆர்த்தி அத்தினா சூர்யாவிடம் உரிமம் முடிந்த நிலையில் கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில் 6 மாத வாடகையும் தராமல், அத்தினா சூர்யாவின் கணவர் பாஜகவின் ஓ பி சி அணியின் மாநில செயலாளர் சூரிய சிவா பொறுப்பு வகிப்பதால், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறியதோடு அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். அதோடு சூரிய சிவா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிக்க நினைப்பதோடு அவற்றை தன்னுடைய பெயருக்கு ஐந்து வருட கால அவகாசத்தில் எழுதி தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டுவதால் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி ஆர்த்தி என்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சூரிய சிவா மீது புகார் மனுவை அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *