பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் தனிநபரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே உள்ளது. கால அவகாசம் முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இன்னும் பலர் இவற்றை இணைக்காமலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு ரூ 1000 வரை வங்கி மூலம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வங்கிச் சேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என வருமான வரித் துறை தரப்பிலிருந்து நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.பலருக்கு தங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். ஏனெனில் வங்கிகளிலேயே இவை பெரும்பாலான சமயங்களில் இணைக்கப்பட்டுவிடும்.
பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம்.

அதன்படி, https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். இந்த முகவரியில் சென்று பான் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவிட்டாலே போதும். ஒருவேளை இவை இணைக்கப்படாமல் இருந்தால் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற முகவரியில் சென்று பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிடலாம். உடனே செக் பண்ணி பாருங்க. இன்னும் 6 நாட்கள் தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *