பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக சக்திவேலன் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவருக்கு பாமக கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அறிவித்தப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக சக்திவேலனை பரிந்துரை செய்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோருக்கு நன்றிகளைத் மேற்கு மாவட்ட தலைவர் சக்திவேலன் தெரிவித்துக் கொண்டார்.

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு நியமன அறிவிப்பில்:-

பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளராக கே.சுதா இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பாமக கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளராக சுதாவை பரிந்துரை செய்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோருக்கு நன்றிகளைத் மாவட்ட பொருளாளர் சுதா தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்