திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் இயங்கிவரனந்த உமா பரமேஸ்வரி மில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு திலிருந்து செயல்படவில்லை. மேலும் பஞ்சாலை நிர்வாகம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடன் காரணமாக சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாலை எந்திரங்களையும் அதன் அசையா சொத்துகளை ஏலம் விட்டு அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மில் நிர்வாகம் தொழிலாளர்களை ஏமாற்றி எந்திரங்களை விட்டுவிட்டு பணத்தையும் தொழிலாளர்கள் தராமல் துரோகம் செய்துவிட்டது.

இதுகுறித்து 16 ஆண்டுகளாக தொழிலாளர்களின் பிஎஃப் கிராஜுவிட்டி பலாபலன்கள் கிடைக்க பல வகையில் தொழிலாளர்கள் சட்ட போராட்டம் கள போராட்டம் நடத்திக் கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி தேசிய பஞ்சு மில் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நாதன் தலைமையில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *