சென்னையில் இன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 04-ஆம் தேதியும், வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 5 -ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் 7-ஆம் தேதி அதனைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அதில் 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சிகள் உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் மேயருக்கான மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். குறிப்பாக தேர்தலை நடத்த ஆயத்த நிலையில் உள்ள தேர்தல் ஆணையம். பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளி வந்த நிலையில் ஜனவரி 27ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *