சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு பொதுமக்கள் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் மற்றும் காலா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதன் மூலம் விமல் மற்றும் விஜய் சேதுபதிக்கு மிக நெருங்கிய நண்பரான பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் பிரிந்தது இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல் கனா என்ற திரைப்படத்தை இயக்கியவரும் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான அருண்ராஜா காமராஜரின் மனைவி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சில மணி நேரங்களுக்கு முன் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது
இவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகத்தினர், ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *