புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் திருச்சி திலக் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் வளாகத்தில் உள்ள மதர் தெரசா மக்கள் மன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை ஆலய பங்குத்தந்தை மறிவளவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மருத்துவர்கள் ஞான திலகன் மற்றும் மருத்துவர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு காது கேளாமை காதில் இரைச்சல் காது அடைப்பு காதில் சீழ் வடிதல் மூக்கு அடைப்பு மூக்கில் ரத்தம் வடிதல் மூக்கில் சதை வளர்தல் குறட்டை தொண்டை வலி விழுங்கும் போது சிரமம் குரல் மாற்றம் ஆகியவற்றிற்கு

நவீன முறையில் எண்டோஸ்கோப்பி கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது மாபெரும் இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று சென்றனர். குறிப்பாக இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சைக்கான மருத்துவ செலவில் பாதியை மேரி திலக் சாங் டிரஸ்ட் என்கிற தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்